Categories
பல்சுவை

Pisa கோபுரம் விழுந்து விடுமா?…. இன்ஜினியர்களின் செயல்…. வெளியான அறிவியல் காரணங்கள்….!!!

பைசா கோபுரம் சாய்வாக இருப்பதற்கான காரணம் குறித்தும், அதன் பெருமை குறித்தும் இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்.

 

இத்தாலியில் பைசா கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சாய்வாக இருந்தாலும் 100 ஆண்டுகள் தாண்டியும், கீழே விழாமல் உறுதியாக நிற்கிறது. இந்த பைசா கோபுரம் எதற்காக சார்ந்தது என்பது பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த பைசா கோபுரம் ஒரு ஆலயத்திற்கு மணிக்கூண்டு வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரம் கட்டுவதற்கான பணி 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கட்டிடத்தை Guglielmo, Bonanno Pisano என்பவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் முதல் 2  தளங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பிறகு 1178-ம் ஆண்டு மூன்றாம் தளம் கட்டி முடிக்கும் போது தான் கட்டிடம் ஒரு புறமாக சாய ஆரம்பித்தது.

இதற்கு காரணம் பைசா கோபுரம் களிமண் கலவை நிறைந்த இடத்தில் கட்டப்பட்டது. இந்த களிமண்ணில் கடினப்படும் தன்மை குறைவாக இருப்பதாலும்,  3 மீட்டர் ஆழத்திற்கு கட்டப்பட்டதாலும் கட்டிடம் எடையை தாங்க முடியாமல் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக களிமண் இறுகும் வரை பொறியாளர்கள் காத்திருந்தனர். அவர்கள் காத்திருந்து 100 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு 1272-ம் ஆண்டு மீண்டும் 4 தளங்களை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 1284-ம் ஆண்டு நடைபெற்ற மேலோரியா போரினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு 1372-ம் ஆண்டு பைசா கோபுரத்தில் மணி நிறுவப்பட்டது.

இந்த பணி நிறைவடைந்து 200 வருடங்கள் முடிவடைந்தது. இதனையடுத்து 19-ம் நூற்றாண்டில் மீண்டும் பைசா கோபுரம் சாயத் தொடங்கியது. இதன் காரணமாக 800 டன் எடையை கட்டிடம் சரியும் திசைக்கு எதிர்திசையில் வைத்து கோபுரம் சாய்வதை ஓரளவு சமன் செய்தார்கள். இந்த பணி நிறைவடைவதற்குள் உலகப் போர் ஆரம்பித்து விட்டது. அப்போது இத்தாலியில் உள்ள அனைத்து கட்டிடங்களும் அமெரிக்காவால் தகர்த்தப்பட்டது. ஆனால் பைசா கோபுரம் மட்டும் அகற்றப்படவில்லை.

இதனால் கோபுரத்தின் பெருமையை உணர்ந்த இத்தாலி மீண்டும் கோபுரத்தை சாய விடாமல் தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டனர். இந்த கோபுரம் 1990-ம் ஆண்டு 5.5 டிகிரி சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் கோபுரம் விழுந்து விடும் என்ற அச்சத்தில் 1990-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பைசா கோபுரம் மூடப்பட்டது. ஆனால் 10 வருடங்கள் நிறைவடையும் கட்டிடத்திற்கு எதுவும் ஆகவில்லை. இதனால் 10 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பைசா கோபுரத்தின் சாய்ந்த டிகிரி 5.5 லிருந்து 3.99 டிகிரி ஆக குறைக்கப்பட்டது. அதன்பிறகு 2001 டிசம்பர் 15-ம் தேதி பைசா கோபுரம் பார்வையாளர்களின் வசதிக்காக திறக்கப்பட்டது.

Categories

Tech |