பாளையங்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் பாளையங்கோட்டையை சேர்ந்த சாலை குமார், ஆறுமுகம் உள்ளிட்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தார்கள் மேலும் அவர்களிடமிருந்த ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தார்கள்.
இதுபோல தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தார்கள். இதையடுத்து புலியங்குடி பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றார்கள். நெல்லை வழியாக நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகளில் முறைகேடு நடக்கிறதா என்பது பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.