கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தேனி மாவட்டத்திலுள்ள போடி பகுதியில் பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர் கொண்ட அந்த கிணற்றில் நேற்று திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு பரமன் கிணற்றுக்குள் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் நாய் ஒன்று விழுந்து கிடப்பது பரமனுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பரமன் போடி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் கூடை வலை மூலம் கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்டனர். அதன் பின் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.