Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுவனின் அத்துமீறிய செயலால்…. ஆட்டோவில் சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை….!!

நிறைமாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி ஒருவர் ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை அவரது உறவினர்கள் ஒரு ஆட்டோவில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ஆட்டோவில் செல்லும் வழியிலேயே அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் அவரது உறவினர்கள் அந்த சிறுமியையும், குழந்தையையும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமி கூறியதாவது, தன்னுடன் பள்ளியில் படித்த 17 வயது சிறுவன் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமி அந்த சிறுவனின் பெயர் மட்டுமே தனக்கு தெரியும் என்றும், அவரை பற்றிய விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |