Categories
பல்சுவை

மர்மம் நிறைந்த கிராமம்…. மனிதர்கள் வாழவே பயப்படுறாங்க…. அப்படி என்ன நடந்துச்சு?…..!!!!

நாம் வாழும் இந்த உலகத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்த இடங்கள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் உள்ள மனிதர்கள் வாழ பயப்படக்கூடிய குல்தாரா எனும் கிராமம். 1800ஆம் வருடத்திலிருந்து எந்தவொரு மனிதராலும் அங்கு சென்று வாழவே முடியவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் பலிவால் பிராமின்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது ஒரு அமைச்சர் அந்த கிராமத்தில் இருந்த ஒரு பெண் மீது காதல் கொண்டார். ஆனால் கிராம மக்களுக்கு அந்தப் பெண்ணை அமைச்சருக்கு கொடுப்பதற்கு விருப்பமில்லை.

இதன் காரணமாக அந்த கிராம மக்களை, அமைச்சர் கொடுமைப்படுத்தி வந்தார். இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் ஒரு நள்ளிரவில் அந்த கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து பல்வேறு மக்கள் அந்த கிராமத்தில் வாழ முயற்சி செய்தனர். எனினும் அந்த கிராமத்தில் எவராலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. அவ்வாறு அந்த கிராமத்திற்கு வாழ சென்றவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் திரும்பி செல்கின்றனர். இன்றைக்கும் அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்களின் சாபம் அந்த இடத்தை சுற்றி இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இன்று வரைக்கும் யாரும் அந்த கிராமத்திற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள்.

Categories

Tech |