நாம் ஒருவருக்கு செய்யும் உதவிகளை நினைத்து பார்க்காத மனிதர்கள் இருகிறார்கள். ஆனால் நாம் விலங்குகளுக்கு செய்யும் ஒரு சிறிய உதவி கூட வீணாகாது என்பது இந்த செய்தியை பார்க்கும் போது தெரியும்.
ஒருவர் உயிரிழந்தால் குடும்பத்தினர் பொதுவாக உறவினர்களுக்கு சொல்லி அனுப்புவார்கள். அதன்பிறகு தான் அஞ்சலி செலுத்துவதற்காக உறவினர்கள் இறந்தவரின் வீட்டிற்கு வருவார்கள். ஆனால் ஒருவர் இறந்தவுடன் யாருக்கும் சொல்லாமல் அஞ்சலி செலுத்த ஒரு கூட்டமே வந்துள்ளது. அது எப்படி தெரியுமா? அதாவது சவுத் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் அந்தோணி என்பவர் உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்து விடுகிறார்கள். இவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினர் சொந்தக்காரர்கள் யாருக்கும் சொல்லவில்லை. ஆனால் ஒரு மிகப் பெரிய கூட்டமே அஞ்சலி செலுத்துவதற்கு வந்துள்ளது. அப்படி யார் வந்தார்கள் தெரியுமா? அதாவது பல்வேறு திசைகளிலிருந்து ஒரு யானை கூட்டமே மைக்கேல் வீட்டிற்கு சென்றுள்ளது. இதற்கு காரணம் சிறு வயதிலிருந்தே யானைகள் மீது மைக்கேல் மிகுந்த அன்புடன் இருந்துள்ளார்.
இதன் காரணமாக மைக்கல் அந்தோனி தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் யானைகளுக்காக அர்ப்பணித்துள்ளார். அப்படி இருக்கும் போது ஒரு நாள் மைக்கேல் அந்தோணி இறந்து விடுகிறார். ஆனால் மைக்கல் அந்தோனி இறந்தது எப்படி யானைகளுக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் மைக்கேல் இறந்து 12 மணி நேரத்திற்குள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு திசைகளிலிருந்தும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளது. இந்த யானைகள் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதைப் பார்த்து மைக்கேலின் மகன் கதறி அழுதுள்ளார். ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மைக்கேல் லாரன்ஸ் இறந்து சரியாக ஒரு வருடம் முடிவடைந்ததும் மீண்டும் யானைகள் அவரைப் புதைத்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளது.