கடந்த 2016 ஆம் வருடம் அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் எப்போதும் ஹேர்கட் செய்யும்போது ஒரு சிறுவன் வேண்டாம் என்று சொல்லி அடம் பிடிப்பான். இதையடுத்து அந்த சிறுவன் தன் தந்தையிடம் எனக்கு மொட்டையடிக்க வேண்டும் என்று கூறினார். இதனைக் கேட்ட அந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். எனினும் சிறுவனின் விருப்பப்படி அவருக்கு மொட்டையடித்து விட்டார். அதன்பின் மறுநாள் சிறுவனை அவரது தந்தை பள்ளிக்கூடத்தில் விட சென்றார். அப்போது அந்த வகுப்பில் இருந்த 80 மாணவர்களும் மொட்டையடித்து இருந்தனர்.
மேலும் பெற்றோர்கள், அந்த வகுப்பின் ஆசிரியர்களும் மொட்டையடித்து இருந்தனர். அதன்பின் அங்கு நடந்த சம்பவத்தை தெரிந்துகொண்டு அந்த சிறுவனின் தந்தையும் மொட்டையடித்துக் கொண்டார். அப்படி என்ன நடந்தது என்றால், அந்த வகுப்பில் உள்ள மார்லி பேக் என்ற ஒரு பெண்ணுக்கு கேன்சர் காரணமாக அவரின் முடியெல்லாம் கொட்டிவிடுகிறது. இதனால் அந்த பெண்ணுடன் சேர்த்து கேன்சரால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுக்காக ட்ரீட்மென்ட்க்கு நிதி திரட்டுவதற்காக அவர்கள் அனைவரும் மொட்டையடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மற்றவர்கள் கஷ்டப்படுவதை வேடிக்கை பார்க்கும் இந்த உலகத்தில் கூடப்படிக்கும் பெண்ணிற்காக சிறுவர்கள் செய்த செயல் வியக்கத்தக்க ஒன்றாகும்.