பான் கார்டு என்பது இப்போது அனைவருக்குமே அவசியமாகிவிட்டது. மேலும் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு என்பது மிகவும் அவசியம். இதன் மூலமாக வருமான வரி கணக்குகளை மத்திய அரசு எளிதில் அறிவதற்காக பான் கார்டு உதவுகிறது. வங்கி கணக்கில் கூட பான் கார்டு இணைப்பு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு வாங்குவதற்கு பல இடங்களில் அலைய வேண்டியது இருக்கிறது. மேலும் விண்ணப்பித்தாலும் வருவதற்கும் கால அவகாசம் எடுக்கிறது. இந்நிலையில் பான் கார்டு இல்லாதவர்கள் மற்றும் பான் கார்டுகளை தொலைத்து விட்டவர்கள் மீண்டும் பான் கார்டுகளை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எனவே பான் கார்டு பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதலில் pan card reprint என டைப் செய்யவும். அதன் பின்னர் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் பான் நம்பர், ஆதார் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும். கடைசியாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ’submit’ என்பதைக் கிளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்களுடைய அனைத்து தகவல்களும் அந்தப் பக்கத்தில் இருக்கும்.
பின்னர் முகவரியை பதிவு செய்ய வேண்டும். முகவரி சரிபார்ப்புக்கு பிறகு OTP பெற வேண்டும். அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் OTP அனுப்பப்படும். இப்போது generate OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உடனே மொபைல் நம்பருக்கு OTP வரும். இதனையடுத்து Generate and Print என்பதை கிளிக் செய்தால் ரசீது உருவாக்கப்படும். நீங்கள் விரும்பினால், அதை பிரிண்ட் எடுக்கலாம் அல்லது உங்கள் மொபைல் போனில் சேமிக்கலாம்.