Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகருக்கு வில்லியாக மாறும் நடிகை!….

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் 168-வது படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பானது ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

முத்து மற்றும் எஜமான் படங்களை அடுத்து நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் குஷ்பு நடிகை மீனாவிற்கு எதிராக நடிப்பதாக செய்திகள் வெளியாகிறது. இக்கதையில் நடிகை குஷ்பு ரஜினியின் மற்றொரு மனைவியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆகவே இப்படத்தில் ரஜினிக்கு இரண்டு மனைவிகள் என தெரியவந்துள்ளது. நடிகை குஷ்பு இக்கதையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக ரஜினியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். பின்னர் ரஜினிக்கு வில்லியாக குஷ்பு மாறுகிறார் என இக்கதையில் கூறப்படுகிறது.

Categories

Tech |