மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை நேரடி எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தொலைதூர கல்வி இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Categories