இனிவரும் காலங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மக்களுடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 70% இந்தியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்படும் என பல நிறுவனங்கள் அச்சம் அடைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் செயலிகளை தொடங்குகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே பல நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
ஆனால் தற்போது இணையதளத்தை தாண்டி செயலி மூலமாக மக்களிடையே நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என நிறுவனங்கள் நம்புகின்றது. இந்த செயலி மூலமாக விற்பனை செய்வதன் மூலம் நிர்வாகச் செலவுகளை குறைக்கலாம். இந்நிலையில் நிறுவனங்கள் செயலி பயன்பாட்டில் ஈடுபட்டாலும், அதை மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதாவது 100% மக்கள் ஒரு செயலியை பயன்படுத்தினால் அதில் 30% மக்கள் அதிலிருந்து வெளியே வந்து விடுகிறார்கள். மேலும் தங்களுடைய ஸ்மார்ட் போனில் செயலி வைத்திருப்பவர்களில் குறிப்பிட்ட ஒரு சிலர்தான் அதைப் பயன்படுத்துகிறார்கள்.