Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் புதிதாக எந்த வகை கொரோனாவும் இல்ல”….. ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்தது அதை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அனைத்து நோயாளிகளும் தற்போது நலமாக உள்ளனர். சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த உயிர் சேதமும் இல்லாமல் அனைவரும் தற்போது  டவர் மூன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பல்வேறு நல்ல உள்ளங்கள் தங்களது உயிரை பணையம் வைத்து நோயாளிகளை காப்பாற்றியுள்ளனர். இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பழமையானது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. உயிர்களை காப்பாற்றிய ஊடக நண்பர்கள், தீயணைப்புத் துறையினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என்ற அனைவருக்கும் நன்றி.  இளம் மருத்துவர்கள் நேற்று தீ விபத்தில் சிக்கிக்கொண்ட நோயாளிகளுக்கு கடைசிவரை உதவி செய்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு 3 குழு நியமிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு அதிகரிக்க முதல்வரின் பேரில் நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அவர் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று வரை 171. நேற்று மட்டும் ஐஐடியில்  1,670 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐஐடி தவிர சென்னையில் பிற இடங்களில் தொற்று பாதிக்கவில்லை. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக சேரக்கூடிய ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். ஐஐடி முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றது. மேலும் தற்போது பரிசோதனையில் எந்த வகையான புதிய வைரஸும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |