மனித உடல் உறுப்பில் அனைத்து பாகங்களும் முக்கியமானது என்றாலும், மூளையின் செயல்பாடுகள் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
மனிதனின் உடல் உறுப்பில் உள்ள அனைத்து பாகங்களும் ஏதாவது ஒரு வேலையை செய்கிறது. அதில் குறிப்பாக மூளை என்பது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து தகவல்களை பெற்று, அதை விளக்கி நம்மை வழிநடத்துகிறது. மனிதனின் தலைமை செயலகமாக மூளை செயல்படுகிறது. இந்நிலையில் ஒரு மனிதனின் மொத்த எடையிலிருந்து 2% தான் மூளையின் எடை . நம்முடைய உடல் ஆற்றலில் 20% மூளையே எடுத்துக்கொள்கிறது. பொதுவாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆண்களை விட பெண்கள் தான் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிப்பார்கள். ஆனால் பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை பெரிதாக இருக்குமாம். இதனையடுத்து மனித மூளையில் 60 விகிதம் கொழுப்பு மட்டுமே இருக்கிறது.
நாம் ஒரு பென் ட்ரைவ் மற்றும் அடப்டர் வாங்கும்போது அதில் ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்டோரேஜ் மட்டுமே செய்து கொள்ள முடியும். ஆனால் மனித மூளையில் எவ்வளவு வேண்டுமானாலும் சேகரித்து வைக்கலாம். ஒரு நாளைக்கு நம்முடைய மூளையானது 70,000 நினைவுகளை வெளிப்படுத்துகிறதாம். சிலர் மூளை 20 சதவீதம் மட்டுமே வேலை செய்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. ஏனெனில் மூளையை முழுமையாக மனிதர்கள் பயன்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. நாம் அன்றாடம் காலை தூங்கி எழுந்தவுடன் நம்முடைய மூளையானது மற்ற நேரத்தை விட 23 சதவீதம் வேகமாக வேலை செய்கிறது. மேலும் மூளையின் இடது பக்கம் உள்ளதை உள்ளபடி செய்கின்ற செயலையும், வலது பக்கம் சற்று கடினமான செயலையும் செய்கின்றது.