Categories
தேசிய செய்திகள்

5-12 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி பணி…. எப்போது தொடங்கப்படும்?…. இன்று எடுக்கப்போகும் முடிவு…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும், தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின் வாயிலாகவும் ஏராளமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது. இது மேலுமாக அதிகரிக்கும் அடிப்படையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகி இருந்தால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் முன்எச்சரிக்கை டோஸ் எனும் பெயரில் போடப்படுகிறது. ஆகவே குழந்தைகள் தான் நோய் எதிர்ப்புச் சக்தியை பெறாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்து நேரடி வகுப்புகள் நடைபெறுகிறபோது பல்வேறு இடங்களில் குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாவது பெற்றோர்களுக்கு கவலை அளிக்கிறது.
எனவே குழந்தைகளுக்கும் தடுப்பூசியே தொற்றுக்கு எதிராகவுள்ள ஒரு கேடயமாகும். இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடியபோது, கூடியவிரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதே அரசின் முன்னுரிமை என்று அறிவித்தார். இதற்கிடையில் 5-12 வயது வரையிலானவர்களுக்காக பயாலஜிக்கல்- இ நிறுவனத்தின் கோர் பேவாக்ஸ் தடுப்பூசிக்கும், 5-12 வயது வரையிலானவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர பயன்பாட்டு அனுமதியை 26ஆம் தேதி வழங்கியது. இதனையடுத்து குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்குவது குறித்து கேள்வி எழுந்து இருக்கிறது.
இந்நிலையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசியதாவது “5-12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தொழில் நுட்பக்குழுவின் பரிந்துரையின்படி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். டெல்லியில் (இன்று) தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைகுழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 5-12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை எப்போதுதுவங்கலாம்?.. என்பது தொடர்பாக முடிவுவெடுத்து மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வார்கள். அந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |