சென்னையில் புதிதாக குப்பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்டம் கொண்டு வந்துள்ளனர்.
குப்பை சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம்
வீடுகள் 10 முதல் 100 ரூபாயும்
வணிக நிறுவனங்கள் 1000 முதல் 5000 ரூபாயும்
நட்சத்திர விடுதிகள் 300 முதல் 3,000 ரூபாயும்
திரையரங்குகள் 750 முதல் 2000 ரூபாயும்
பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஆயிரம் முதல் 2000 ஆயிரம் வரையும், மருத்துவமனை மற்றும் கிளினிக்கிற்கு 2000 முதல் 4000 வரை தனியார் பள்ளிகளில் 500 முதல் 1000 வரையும் வசூலிக்கப்படும்.
பொது இடத்தில் குப்பை கொட்டினால் 500 முதல் 5000 வரை, கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் 2,000 முதல் 5,000 வரையும், தரம் பிரித்து வழங்காத குப்பைகளுக்கு 500 முதல் 5000 வரையும், குப்பைகளை ஏரிப்பவர்களுக்கு 500 முதல் 2000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது.