அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலை வகுப்பு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான விவாதம் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதமானது மே 10ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகின்றது. தற்போது சட்டபேரவையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் கூறிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். பெண் கல்வியை ஊக்குவிக்க மாணவிகளுக்கு காலையிலும், மாணவர்களுக்கு மாலையிலும் வகுப்பு நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது” என்று அவர் தெரிவித்தார்.