அனைத்து பெண்களும் பூசி குழிப்பதற்கு ஏற்ற உடலுக்கும் முகத்திற்கும் அதிக பொலிவு தரக்கூடிய ஆவாரம் பூசு மஞ்சள் எப்படி பண்றதுன்னு இத் தொகுப்பில் காண்போம். இந்த பூசுமஞ்சல் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது!!
தேவையான பொருள்கள்;.
ஆவாரம் பூ ; 50 கிராம்
காய்ந்த ரோஜா இதழ்கள் ; 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் ; 100 கிராம
விரலி மஞ்சள் ; 50 கிராம்
பூலாங்கிழங்கு ; 50 கிராம்
கோரைக்கிழங்கு ; 50 கிராம்
வசம்பு ; 50 கிராம்
செய்முறை;
இவை அனைத்தயும் நன்றாக காய வைத்து அரைத்து கொள்ளுங்கள். அதை ஒரு கண்ணாடி பத்திரத்தில் சேமித்து வையுங்கள். ஆவாரம் பூ மஞ்சள் சூப்பரா ரெடி ஆயிடுச்சு. இது பூசி குளிச்சா மஞ்சள் பூசி குளித்து போலவே இருக்காது. ஸ்கூல், காலேஜ் போற பெண்கள் எல்லாம் தயங்காமல் தைரியமா இதை பயன்படுத்தலாம். மேலும் குழந்தையிலிருந்து பாட்டி வயது ஆகிற வரைக்கும் எல்லாருமே இதை பயன்படுத்தலாம். ஒரு தடவை இத செஞ்சு வச்சுட்டா போதுங்க ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப்போகாது. பயன் படுத்தி பாருங்கள்.