1857ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் மரபணு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா நகர் அருகே பழைய கிணறு ஒன்றில் 2014ஆம் ஆண்டு ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றது. இது யாருடையது என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின. இதையடுத்து பஞ்சாப் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் ஷெராவத், ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் மையம், உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மரபணு ஆய்வில் ஈடுபட்டார். அதில் அந்த எலும்புக்கூடுகள் மேற்கு வங்காளத்தின் கிழக்குப்பகுதி ஒடிசா, பீகார், உத்திரபிரதேசம் ஆகியவற்றை சேர்ந்தவர்களிடம் பெற்ற 26ஆவது வங்காள காலாட்படை வீரர்கள் உடையது என்பது தெரியவந்தது.
அவர்கள் தற்போதைய பாகிஸ்தானில் பணிபுரிந்து வருகிறார்கள். 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தின் போது ஆங்கிலேய அதிகாரிகளை அவர்கள் கொலை செய்தனர். பின்னர் பஞ்சாப் மாநிலம் அருகே பிடிபட்டு ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் எலும்பு கூடுகள் தான் தற்போது இங்கு கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.