Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆலையை திறக்க வேண்டும்” பல்வேறு தரப்பினரின் கோரிக்கை…. மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு…!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அருகில் தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த 1987-ம் வருடம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட பிரச்சனை, தொடர் பழுது காரணமாக ஆலை செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2016-ஆம் வருடம் முதல் கரும்பு அரவை நிறுத்தப்பட்டன.

இந்த ஆலையை  மீண்டும் இயங்க வேண்டும் என்று விவசாயிகள், ஆலை ஊழியர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் ஆலையை மீண்டும் செயல்பட இயக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, கடந்த 27 ஆம் தேதி அன்று ஆலையை ஆய்வு செய்தார்.

அதன் பின் அங்கிருந்த விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டார். அப்போது விவசாயிகள் அரவைக்கு தேவையான கரும்பை உற்பத்தி செய்து கொடுப்போம் என்று உறுதி அளித்தார்கள். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், ஊராட்சி தலைவர் சேரன் செங்குட்டுவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |