பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி சாலை நகராட்சி அலுவலகம் பகுதியில் முருகன், நாகராஜ் ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான 2,500 சதுர அடி நிலத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு 7 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் முருகன், தங்கராஜ் ஆகிய 2 பேரும் வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைவரும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.இதனையடுத்து நேற்று அதிகாரிகள் சாந்தி என்பவரது வீட்டை இடித்துள்ளனர் . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சாந்தியின் குடும்பத்தினர் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.