Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு திறமையா?…. நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சி…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள நம்பியார் நடுநிலைப் பள்ளியில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 75 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை 60 நொடியில் கூறி சாதனை படைத்துள்ளனர். மேலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |