Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை…. குரூப்-4 தேர்வுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பம்….!!!!

தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அளிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

அதன்படி அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த வருடம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிகமாக விண்ணப்பித்துள்ளதாகவும், ஒரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டியிடுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிக அளவில் வேலை இல்லாமல் இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே அரசு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கி வேலையில்லா இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |