வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடுர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் நீங்கள் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி அளித்தால் 20 லட்ச ரூபாய் பணம் மற்றும் மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பாலசுப்பிரமணியன் அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலசுப்பிரமணியன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணமோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.