நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளம் கிளிக்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக தனபாலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது பணியை பாராட்டி இவருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. இதனையடுத்து பள்ளியின் சார்பில் தனபாலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தனபாலனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டியுள்ளனர்.