இன்றைய பஞ்சாங்கம்
27-01-2020, தை 13, திங்கட்கிழமை
நாள் முழுவதும் வளர்பிறை திரிதியை திதி.
அவிட்டம் நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு சதயம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்-
மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 27.01.2020
மேஷம்:
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதனால் மன மகிழ்ச்சியும் உண்டு. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெற்றோரிடம் இருந்து வந்த மனக் கஷ்டங்கள் அகலும். எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் விரைவில் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் நல்ல பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். உறவினர்கள் வீடு தேடி வருவதால் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவை அனைத்தும் இன்று பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெண்களின் பலநாள் கனவு நிறைவேறும். குடும்பத்தாருடன் வெளியூர் செல்ல கூடும்.
மிதுனம்:
இன்று ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் வாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. எந்த முயற்சியிலும் பதற்றமின்றி செயல்பட்டால் வீண் நஷ்டங்களை தவிர்க்கலாம். உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்திருந்த உதவிகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள்.
கடகம்:
இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் எந்த காரியத்திலும் அதிக கவனத்துடன் இருப்பது சிறந்தது. தொழிலில் பெரிய அளவு தொகையை செய்யாமல் இருந்தால் நல்லது. வேற்று நபர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது சிறந்தது. வெளியூர் செல்லும்போது கவனம் தேவை.
சிம்மம்:
இன்று உங்களின் பொருளாதார நிலை நல்லதாகவே இருக்கின்றது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிதாய் முயற்சிகள் எடுக்க நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அகலும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் லாபமாக இருக்கும். பழைய கடன் பாக்கிகள் இன்று கைக்கு வரும்.
கன்னி:
இன்று உங்கள் வீடு தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். சகோதர சகோதரிகளிடம் இருந்த மனக்கசப்புகள் அகலும் ஒற்றுமை கூடும். உங்கள் பிள்ளைகளால் இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற்று சுபச் செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். புதிதாய் பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்குவீர்கள். கடன்கள் இன்று குறைய வாய்ப்புள்ளது.
துலாம்:
இன்று சகோதர சகோதரிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வமற்று காணப்படுவார்கள். திருமணம் போன்ற முயற்சிகளில் சிறிய தடைகளுக்குப் பின் நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று பொருளாதார நிலை சீராகும். பழைய நண்பர் ஒருவரின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
விருச்சிகம்:
பொருளாதாரம் தொடர்பாக பல நெருக்கடிகள் இருக்கும். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். எந்த விஷயத்தையும் போராடி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். தெய்வீக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தனுசு:
இன்று புது நம்பிக்கையும் தெம்பும் உருவாகும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். புதிய சொத்து வாங்குவதில் நாட்டம் செல்லும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தினரோடு தெய்வீக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
மகரம்:
இன்று செய்யும் செயலில் கால தாமதம் ஏற்படும். உடன் இருப்பவர்களைஅனுசரித்து செல்வதன மூலம் நல்லது நடக்கும். உடல்நலத்தில் கவனம் அவசியம். வியாபார வளர்ச்சியை மையமாக கொண்டு புதிய திட்டங்களினால் வெற்றியடைவீர்கள். வருமானம் லாபம் ஈட்டும் வகையில் இருக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக முன்னேற்றம் இருக்கும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவ தீரும். சகோதர சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மீனம்:
இன்று பணவரவு அதிக அளவில் இருந்தாலும் அதற்கேற்றபடி உங்களுக்கு செலவுகளும் அதிகரிக்கும். நண்பர்களினால் மனக் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணம் போன்ற முயற்சிகளில் தடைகள் பல ஏற்பட தான் செய்யும் .சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்த்துவிடலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.