Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய மூதாட்டி உள்பட 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது விற்பனை செய்த மூதாட்டி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வடிவேலை கைது செய்ததோடு அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று செவ்வாய்பேட்டை பகுதியில் மது விற்பனை செய்த பாப்பா என்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 24 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |