புழுக்கள் குறித்த ஆராய்ச்சியின் போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு புழு குறித்த தகவல் கிடைத்துள்ளது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கடந்த 2018-ம் ஆண்டு மண் புழுக்கள் குறித்த ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். இவர் 300 தனித்தனியான இடங்களிலிருந்து வெவ்வேறு வகையான மண் புழுக்களை சேகரிக்கிறார். அதன் பிறகு மண் புழுக்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.அவர் ஆராய்ச்சி செய்த அனைத்து மண் புழுக்களும் இறந்து விட்டது. ஆனால் 2 மண் புழுக்கள் மட்டும் உயிருடன் இருந்துள்ளது.
அந்த 2 மண் புழுக்களையும் ஆராய்ச்சி செய்யும்போது விஞ்ஞானிக்கு அவர் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது அந்த 2 மண் புழுக்களும் 41,700 ஆண்டுகளாக உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் ஒரு புழுவினால் இத்தனை வருடங்கள் உயிர் வாழ முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.