Categories
பல்சுவை

Online Games-க்கு செக்…. ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!!!!!

ஆன்லைன் கேம்கள், குதிரைப்பந்தயம், கசினோ ஆகியவற்றுக்கு GST விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு ஆலோசனை நடந்து வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை ரேஸ், கசினோ ஆகியவற்றுக்கு GST விதிப்பது பற்றி அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மே 2 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த குழுவில் கோவா அமைச்சர் மௌவின் கோடின்ஹோவும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் மௌவின் கோடின்ஹோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கசினோ, குதிரை ரேஸ், ஆன்லைன் கேம்ஸ் ஆகியவை பற்றியும் அவற்றுக்கு வரிவிதிப்பது குறித்தும் ஆலோசிப்பதற்கு அமைச்சர்கள் குழு கூட்டம் கூடுகிறது.

உலகின் மற்ற பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களை நாம் கடைபிடிக்க இருக்கிறோம். சொல்லப்போனால் எங்கு எல்லாம் கசினோ,குதிரை பந்தயம் நடைபெறுகிறதோ அங்கு பின்பற்றப்படும் நடைமுறையினை இங்கு கொண்டு வருவோம். அமைச்சர்கள் குழுவில் நாங்கள் தொழில் துறைக்கு சிறந்த நடைமுறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன்பின் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் GST கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து இறுதிகட்ட முடிவு GST கவுன்சிலால் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |