Categories
ஆட்டோ மொபைல்

புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ நிறுவனம்…. புது மாடல் i4 எலக்ட்ரிக் கார் அறிமுகம்…. எப்போது தெரியுமா?….!!

பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மே 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த நாளில் புகழ்பெற்ற கியா நிறுவனமும் தன்னுடைய EV6 எலக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் i4 எலக்ட்ரிக் செடான் மாடல் கார் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2-வது எலக்ட்ரிக் மாடல் கார் ஆகும்.

இந்த கார் ஆடம்பர பிரிவில் அறிமுகம் செய்யப்படும் முதல் செடான் கார்‌ ஆகும். இந்த மாடல் கார் இந்தியாவில் இடிரைவ் 40 வேரியண்டில் கிடைக்கிறது. இந்த காரில் 82.5 கிலோ வாட் ஹவர்‌ பவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக 330 ஹெச்பி பவர் மற்றும் 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை ஏற்படுத்துகிறது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்வதால் 483 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணி நேரம் ஆகும்.

Categories

Tech |