மோட்டார் சைக்கிள் மீது காட்டெருமை மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கைலாசபட்டியில் கூலி தொழிலாளியான அன்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அடுக்கம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த ஒரு காட்டெருமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அன்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அன்ன ராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.