வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைப்பதற்காக அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் சப்போர்ட் வலைத்தள பக்கத்தில் கேஷ்பேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால் 11 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் செயலியில் பேமெண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீடிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் கேஷ்பேக் சலுகையை தற்போது அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 30 நாட்களாக பேமெண்ட் சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை வாட்ஸ்அப் முதற்கட்டமாக வழங்கி வருகின்றது. கேஷ்பேக் சலுகையின் மூலம் வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவில் மொபைல் பேமெண்ட் சந்தையில் ஆழமாக கால்பதிக்க முடியும். இதில் தற்போது கூகுள் பே, போன்பே போன்ற சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்தே விரைவில் வாட்ஸ்அப் செயலியும் இடம்பெற உள்ளது. அதனால் இந்த கேஷ்பேக் சலுகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.