இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எங்கும் எதுவும் செய்ய முடியாது, அரசு நலத்திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் செல்போன் நம்பர் மற்றும் இமெயில் முகவரி சரியாக இருக்கிறதா என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. இதனை எப்படி தெரிந்துகொள்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
முதலில் myaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று Verify Mobile Number’அல்லது ‘Verify Email Address’ என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். செல்போன் எண்ணை வெரிஃபை செய்வதாக இருந்தால் Verify Mobile Number என்பதை கிளிக் செய்து ஆதார் நம்பரையும், மொபைல் நம்பரையும் கொடுத்தால் போதும். கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட வேண்டியிருக்கும். இதனையடுத்து உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். ஏற்கனவே வெரிசை செய்யப்பட்ட செல்போன் நம்பராக இருந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். தவறாக இருந்தாலும் அதில் தெரிந்துகொள்ள முடியும். இதே முறையைப் பயன்படுத்தி உங்களுடைய ஈமெயில் ஐடியையும் நீங்கள் வெரிஃபை செய்து கொள்ளலாம்.