இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு மத்திய அரசின் தேசிய பென்சன் திட்டம் உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலமாகவே இணைந்து கொள்ளலாம். அதற்கான வசதி தபால் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26ம் தேதி முதல் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் இதில் இணைந்து கொள்ளலாம். அஞ்சல் துறையின் “National Pension System-Online Services” என்ற இணையதள பக்கத்தில் சென்று இணையலாம்.
இதற்கான சேவை கட்டணம் குறைவுதான். மத்திய அரசு தவிர மாநில அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் கணக்கிலிருந்து இறுதி பணம் எடுப்பதில் 60% தொகைக்கு வரி விலக்கு கொடுக்கப்படுகிறது.