அசல் ஆவணங்களை தராததால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டு இருக்கின்றது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே இருக்கும் நெம்மேலி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வைத்து கடன் பெற்று இருக்கின்றார். கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக திருப்பி செலுத்தியும் அவருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் வீட்டு வசதி வாரியம் இழுத்தடித்து வந்தது.
இதனால் சீனிவாசன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவரின் அசல் ஆவணங்களை உடனடியாக திருப்பி தரவேண்டுமென என சென்ற 2016 ஆம் வருடம் டிசம்பர் 27-ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. இதனால் சீனிவாசன் உத்தரவை நிறைவேற்ற கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் சக்கரவர்த்தி விசாரணை நடத்தியதில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி ஆணைய மேலாண்மை இயக்குனர், தஞ்சை வீட்டுவசதி மண்டல துணை பதிவாளர், நன்னிலம் வட்டம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இன்று ஆஜர்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார்.