12 வருடங்களுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசய கோவில் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 7-ம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது. இந்நிலையில் வேதகிரீஸ்வரர் கோவில் பூசாரி கொடுக்கும் பிரசாதத்தை கழுகுகள் உட்கொள்வதால் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் புராண வரலாறு படி சிவபெருமானிடம் பரத்வாஜ மகரிஷி நீண்ட ஆயுள் வேண்டும் என கேட்கிறார். இவர் வேதங்களை படிப்பதற்காக தனக்கு நீண்ட ஆயுள் வேண்டுமென சிவபெருமானிடம் கேட்டுள்ளார்.
இதற்கு சிவபெருமான் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் வேதங்களைப் படிக்க முடியாது என்றும் பக்திதான் முக்திக்கு வழி என்றும் கூறியுள்ளார். இந்த கோவிலுக்கு ஒரு நாள் மார்க்கண்டேயர் வந்துள்ளார். இவருக்கு பூஜை செய்வதற்கான பாத்திரம் இல்லாததால் அதற்கு பதிலாக சங்கை வரவழைத்து பயன்படுத்தியுள்ளார். அதிலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை வேதகிரீஸ்வரர் கோவிலில் சங்கு பிறக்கும் அதிசய நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சங்கு பிறக்கும் நிகழ்வு கடைசியாக 2011-ம் வருடம் நடந்துள்ளதாக கோவிலில் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.