Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்….பெரும் பரபரப்பு…!!!!

 நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால், இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் குடிமக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இச்சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு வழி காணாத அரசு பதவி விலக வேண்டும். எனவே  குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது.
ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை. மேலும் இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய இறங்கி வந்தாலும், அந்த அரசும் தனது தலைமையில்தான் அமைய வேண்டும் என பிரதமர் மகிந்தவோ அடம்பிடித்து வருகிறார். இச்சூழலில்  ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போராட்டமானது  நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் தற்போது தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த வகையில் இலங்கையின் சுமார் 1,000 வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நேற்று மு ன்தினம் நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ‘மக்களுக்கு கீழ்ப்படியுங்கள் என்றும்  அரசு பரவி விலக வேண்டும்’ என்றும் இந்த போராட்டம் நடந்துள்ளது . இந்நிலையில்  இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த வேலை நிறுத்தத்தில், சுகாதாரம், துறைமுகங்கள், மின்சாரம், கல்வி, தபால், வங்கி என பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களும் இணைந்தனர். அத்துடன் வர்த்தக அமைப்புகளும் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தன. இதனால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் போன்றவை ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பெரும்பாலான பகுதி களில் குறைவான போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து இந்த போராட்டம் குறித்து ஆசிரியர் தொழிற்சங்க செய்தி தொடர்பாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுயுள்ளதாவது,  ‘ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வரும் சூழலில், அரசோ ஆட்சியில் தொடர முயன்று வருகிறது’ எனவும்  குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கொழும்பு காலி முகத்திடலில் 20-வது நாளாக நடந்து வரும் பொதுமக்களின் போராட்டத்திலும் இணைந்தனர்.
இந்நிலையில் இதற்கு முன்னதாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடைமுறைகளை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கைது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருவதால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்  ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |