Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர் விபத்து…. அதிகாலையிலேயே சோகம்…. அதிர்ச்சி….!!!!

திருமருகல் அருகே கோவில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேர் தெற்கு வீதியில் திரும்பும்போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. களிமேடு தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் இன்று வரை 8 தேர் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |