Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மண் எடுக்க அனுமதி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மண்பாண்டம்,செங்கல் சூளைகளுக்கு சிரமமில்லாமல் மண் எடுக்க உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், செங்கல் சூளைகளுக்கும், மண்பாண்ட தொழிலுக்கும் அதிக அளவு மண் தேவை. இதற்காக அதிமுக ஆட்சியில் சட்டப்பிரிவு 44-ல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் அரசிதழ் வெளியிடப்படவில்லை.

இப்போது அதனை நாங்கள் செய்துள்ளோம். மண் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை. வேளாண் உதவி இயக்குனரிடம் அனுமதி பெற்றால் மட்டும் போதும். மண் எடுக்க கால அளவு மூன்று மாதம். யூனிட்டுக்கு 60 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் போன்ற விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளிடம் உரிய அறிவுறுத்தல்களை அளித்தேன். அனுமதி தரப்படும் அதில் ஒரு சில இடங்களில் பிரச்சனை உள்ளது. அது ஓரிரு நாட்களில் தீர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |