“தாகத்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பங்கேற்று பேசியதாவது “இந்தி எங்களது தேசிய மொழி என அஜய் தேவ்கன் கூறுவதில் தவறு இல்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்களது மொழி மற்றும் கலாச்சாரத்தில் பெருமைகொள்ள உரிமை இருக்கிறது. இந்தியை தேசிய மொழியாக ஏற்கமறுப்பது அரசியலமைப்பை மறுப்பதை போன்றது ஆகும். நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொள்வது இது தான் என்றால், அது உங்கள் தவறு ஆகும். இந்தியை விடவும் கன்னடம் பழமையானது ஆகும். தமிழும் மூத்தது என ஒருவர் என்னிடம் சொல்கிறார் என்றால், அப்போது அதுவும் தவறில்லை.
சமஸ்கிருதம் நம் தேசிய மொழியாக இருத்தல் வேண்டும் என நான் கூறுவேன். இதனிடையில் இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை ஆகும். எதற்காக? சமஸ்கிருதம் தேசிய மொழியாக இல்லை, இன்று நாம் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்துகிறோம். ஆகவே அதுதான் இணைப்பாக இருக்க வேண்டுமா (அல்லது) இந்தி (அல்லது) சமஸ்கிருதமாக இருக்க வேண்டுமா அல்லது தமிழா..?
ஆகையால் இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கென தேசிய மொழி இல்லை. இந்தியைவிட தமிழ் பழமையானது என எங்களுக்குத் தெரியும். ஆனால் சமஸ்கிருதம் அதனை விட பழமையான மொழி ஆகும். அனைவருக்குமே அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பெருமைகொள்ள பிறப்புரிமை இருக்கிறது என்பதால் நான் பெருமைப்படுகிறேன்.