இந்தியாவிலுள்ள வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது தற்போதுள்ள மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறிவிட்டது. அந்த வகையில் தேவைக்கு ஏற்ப பணத்தை பிக்சட்டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற நோக்கில் பலரும் இப்போது வங்கிகளில் இத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் முதலிடத்தில் இருப்பது பிக்சட்டெபாசிட் திட்டம் தான். இதன் வாயிலாக குறைந்த காலத்திற்கு உங்களது சேமிப்புப் பணத்தை 2ஆக மாற்றிவிடலாம். இந்நிலையில் இப்போது வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குகளில் லட்ச கணக்கில் பணம் வைத்து இருப்பவர்கள், பேங்க் சேவிங் அக்கவுண்டில் பணத்தை போட்டு வைத்து இருப்பது அதனை பாதுகாக்க நல்ல வழி ஆகும்.
எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு மத்தியில், வங்கி மோசடிகள் குறித்து நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது தான் அந்த பணத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழியாக இருக்கும். அதாவது நீங்கள் மிகவும் வீக்கான Password-ஐ வைத்து இருந்தால் ஹேக்கர்கள் எளிதாக உங்கள் ஆன்லைன் பேங்கிங் அணுகமுடியும். அத்துடன் வீக்கான Password-களுக்கு உதாரணங்கள் password, qwerty, 123456 ஆகும். இதை தவிர்த்து உங்களது மொபைல் எண், பிறந்தநாள் ஆகியவையும் ஆகும்.
ஆகவே உங்கள் ஒவ்வொரு ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட்களுக்கும் தனித்துவமான மற்றும் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட்களை பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் வங்கிகள் பரிவர்த்தனைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ மெயில்கள் வாயிலாக தகவல்களை அனுப்புகிறது. ஆகவே உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் பேங்க் மெசேஜ்களை தவறாமல் செக் செய்ய வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை நீங்கள் செய்யவில்லை எனில், அதனை உடனே கண்டறிய மற்றும் இழப்புகளை தவிர்க்க பேங்க் அக்கவுண்ட் கண்காணிக்கும் பழக்கம் உதவும்.