Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலி ஆவணங்கள்” அத்துமீறிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. நீதிமன்றத்தின் உத்தரவு…!!!

சொத்தை அபகரித்த குற்றத்திற்காக 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள நாவலூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இவர் தனது தாய் வீட்டின் மூலம் கிடைத்த 11 சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் சொத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு போலி பத்திரங்கள் தயார் செய்துள்ளார். இந்த போலி ஆவணங்களை காட்டி சாந்தகுமாரியின் வீட்டின் சுற்றுச்சுவரை பொக்லைன்  இயந்திரம் மூலமாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். அதன்பிறகு ரகு  தன்னுடைய அடியாட்கள் 11 பேருடன் சேர்ந்து சாந்தகுமாரியின் வீட்டிலிருந்த 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 7 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து சாந்தகுமாரி தாழம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாந்தகுமாரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ரகு உட்பட 11 பேர் மீது போலி ஆவணங்கள் தயாரித்து சொத்து அபகரித்ததாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து சாந்தகுமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதன்பிறகு ரகு உட்பட 11 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடையுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதன்பிறகு ரகு உட்பட 11 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த டவுன் காவல்துறையினர் ரகு உட்பட 11 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |