Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஆணைய பிரதிநிதிகளுக்கு ஊதியம்…. சட்டத் திருத்த மசோதா தாக்கல்….!!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையர் பிரதிநிதிகளும் ஊதியம் படிகள் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி  செல்வராஜ் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம், படி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலாக ஊதியங்கள், படி தொகைகள் வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது எனவும் அதற்கு ஏற்ற வகையில் சட்ட திருத்தம் வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப் படுவதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ்.

Categories

Tech |