Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சமையல் செய்து கொண்டிருந்த வாலிபர்” திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. தீயணைப்புத் துறையினரின் முயற்சி….!!

வீட்டிலிருந்த சமையல் எரிவாயு வெடித்ததில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஜமீன் புத்தூர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் கிருஷ்ணகுமார் என்ற வாலிபர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கழிவுகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சமையல் எரிவாயுவிலிருந்து கியாஸ் கசிந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்ததில் கிருஷ்ணகுமாரின் உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இவர் காயங்களுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். இதனையடுத்து சமையல் எரிவாயு வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு படுகாயமடைந்த கிருஷ்ண குமாரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு கிருஷ்ணகுமார் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |