நூல் பண்டல்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையிலிருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று பெருந்துறை ஆர்.எஸ் சாலை வழியாக நாமக்கல் மாவட்ட பள்ளி பாளையத்திற்கு சென்றது. இந்த வேன் சென்னிமலை அடுத்த கோரக்காட்டு வலசு அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சரானது. இதனால் நிலை தடுமாறிய வேன் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. அதன்பின் விபத்தான சரக்கு வேனிலிருந்து நூல் பண்டல்களை வேறு வண்டியில் ஏற்றி கொண்டு சென்றன.