பூட்டான் நாட்டிற்கு சென்றிருக்கும் மத்திய மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், பூட்டான் வங்காளதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று வங்காளதேச தலைநகரான டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியுமான அப்துல் மொமன்ட் போன்றோரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அதனை எடுத்து பூடான் நாட்டிற்கு இன்று சென்று பிரதமர் பேசியுள்ளார்.
அதன்பின்பு, வெளியுறவு துறை மந்திரியையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பூடான் நாட்டிற்கு இந்திய சார்பாக 12- வது மருத்துவ உதவி பொருட்களை வழங்கப்பட்டிருந்தது.
அதற்கான தொகுப்பை பூட்டான் அரசாங்கத்திடம் ஜெய்சங்கர் வழங்கியிருக்கிறார். கொரோனாவிற்கு பிற்பட்ட கால முன்னேற்றத்தில் பூட்டான் அரசாங்கத்துடன் இந்தியா என்றைக்கும் துணையாக இருக்கும் என்று ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.