Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விளையாடிக் கொண்டிருந்த குழந்தை” திடீரென வந்த பன்றி…. வலியால் துடித்த பரிதாபம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

குழந்தையை பன்றி கடித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் ராஜா-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முகேன் (2) என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குழந்தை வீட்டு வாசலின் முன்பாக தனியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த ஒரு பன்றி குழந்தையின் கையில் கடித்துள்ளது. இதனால் குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்‌ குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  நாய்கள், பன்றிகள், மாடுகள் போன்றவைகள்  கூட்டம் கூட்டமாக பொது மக்களுக்கு இடையூறாகவும், அச்சம் ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றித் திரிகிறது. எனவே தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகள், நாய்கள் மற்றும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |