Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….! ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்….. ஓடிபி சொன்னதால்…. ரூ.1.30 லட்சம் அபேஸ்…..!!!

ஒரே ஒரு எஸ்எம்எஸ் மற்றும் ஓடிபி சொன்னதால் 1.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 11ஆம் தேதி எஸ்பிஐ வங்கி என்ற பெயரில் தங்களது பான் கார்டை புதுப்பிக்கும் படி ஒரு செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி நான்கு இலக்க எண்ணை நிரப்ப கோரி விண்ணப்பம் வந்தது. இதை தொடர்ந்து அவர் கேட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்ததும், பின்னர் அவரது செல்போனுக்கு ஒரு ஓடிபி வந்துள்ளது.

அதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து 72 ஆயிரம், 25 ஆயிரம், மற்றும் 6 ஆயிரத்து 500 என மூன்று தவணையாக படம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கி பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி பணமெடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. எனவே மக்களே வங்கி பெயரில் குறுஞ்செய்தி வந்தால் அதை கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும் என்று வங்கி தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |