சிம்பு நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலமாக அறிமுகமானவர் சமந்தா. இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு கத்தி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன்பின் 2013ஆம் ஆண்டு சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமந்தா சில படங்களில் கவர்ச்சியாக நடிப்பதால் நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை எனவும் அதன் காரணமாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு வந்தது எனவும் பலர் கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்தியில் வெளியான பேமிலி மேன் வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இந்த தொடரில் சமந்தா நடித்த சில காட்சிகள் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவ்வபோது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் சமந்தா.
இந்நிலையில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு உச்சக்கட்ட கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். கவர்ச்சியாக சமந்தா ஆடிய இந்த பாடல் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இளம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பல மொழி படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்க்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் சமந்தாவின் கதாப்பாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் இன்று சமந்தா பல நாட்களுக்குப்பின் ட்விட்டரில் ரசிகர்களிடம் உரையாடினார். பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அதுபோலவே சமந்தாவும் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் காதல் மற்றும் வெறுப்பு இரண்டையும் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு சமந்தா அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை காதல் மற்றும் வெறுப்பு இரண்டிலும் இருந்து நாம் தூரமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சமந்தா பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.