அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வேதநாயகபுரம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மணி மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து மும்முடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மணியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.