தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் செல்போனை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஷூ, பெல்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி அணிந்து வந்தால் கூட தேர்வு அறைக்கு வெளியே கழட்டி வைக்கவும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது